5. நடுகற் காதை

15

மைம்மல ருண்கண் மடந்தைய ரடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ


15
உரை
16

       மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக் கொம்மை வரிமுலை வெம்மை வேது உறீஇ - கருங்குவளை மலர்போலும் மைபூசிய கண்களையுடைய மகளிரது மார்பகத் தடங்காத திரண்ட தொய்யிலெழுதிய முலையானே வெம்மையுற வேது கொணடு ;

       கொம்மை - திரட்சி, வேது - வெம்மையுடைய ஒற்றடம் ; 1"தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலை வேதுகொண்டொற்றியும்" என்றார் பிறரும்.


1. கலிங்க. கடை. 35.