5. நடுகற் காதை



வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்


141
உரை
142

       வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு-கொடஞ்சொல்லுடைய யவனரது வளமிக்க நாட்டினை ஆட்சி செய்து, பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும் - பொன்பட்ட உயர்ந்த இமயமலையிடத்தே புக்கவனும்;

       யவனர் நாடாண்ட செய்தி, 1"வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கற், றென்குமரி யாண்ட" எனப் பின்னரும் கூறப்படும்.


1. சிலப். 29, "வன்சொல்".