|
|
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு
வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்
|
|
மிகப்
பெருந் தானையோடு இருஞ்செரு ஓட்டி - மிகப் பெரிதாகிய சேனையோடே பெரிய போரினைத்
துரந்து, அகப்பா எறிந்த அருந்திறலாயினும் - பகைவர் மதிலையழித்த அரிய திறலையுடையோனும்;
போரின்கண் தானையோடு ஓடச்செய்து
என்றுமாம். அகப்பா - மதில்; இதனை ஓர் அரணின் பெயராகச் சிலர் கூறுவது பொருத்தமின்று;
1
"அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு" என்பதுங் காண்க. மிகற் பெருந்தானை யென்னும் பாடத்திற்குத்
தருக்கினையுடைய சேனை யென்க.
|
1.
பதிற், 3. பதிகம்.
|
|