|
145
|
உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்
|
|
உருகெழு
மரபின் அயிரை மண்ணி-உட்குப் பொருந்தும் முறைமையினையுடைய அயிரை மலையிற் கொற்றவையென்னுந்
தெய்வத்தை நீராட்டி வழிபட்டு, இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும்-ஒரு பகலில் இரு கடல்நீரையும்
கொணர்வித்து முழுகினோனும்;
அயிரை - சேரநாட்டுள்ளதோர் மலை;
ஈண்டு அதன்கணுள்ள தெய்வத்தை யுணர்த்திற்று. மண்ணுதல் - திருமுழுக்குச் செய்வித்தல்.
இருகடல் - தன்னதாய மேல் கடலும், வேற்றுவேந்தனதாய்த் தன்னால் வெல்லப்பட்ட நாட்டிற்
கீழ் கடலுமாம்; 1"இருகட
னீரு மொருபக லாடி, அயிரை பரைஇ" என்பதும், அதனுரையுங் காண்க. அயிரை - ஓர் யாறு என்பர்
அரும்பதவுரையாசிரியர்.
|
1.
பதிற், 3. பதிகம்.
|
|