|
|
சதுக்கப் பூதரை வஞ்சியுள்
தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்
|
|
சதுக்கப்
பூதரை வஞ்சியுள் தந்து-சதுக்கப் பூதங்களை அமராபதியினின்றும், வஞ்சி நகரத்துக் கொணர்ந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் - சோம யாகத்தினைச் செய்தோனும் ஆகிய;
ஆயினும் என்பது ஓரெண்ணிடைச்சொல்;
1"அருந்தவர்க்காயிலு
மரசர்க்காயினும்" என்புழிப் போல. சோமயாகஞ் செய்தோன் சோமயாஜி எனப்படுவன்.
|
1.
மணி, 6 ; 54;
|
|