|
150
|
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்
|
|
மீக்கூற்றாளர்
யாவரும் இன்மையின் - மேம்பட்ட புகழினையுடையார் ஒருவரும் இல்லாது இறந்தமையானே, யாக்கை
நில்லாது என்பதை உணர்ந்தோய் - உடல் நிலையாது என்பதனை நீ யறிந்தனை;
மீக்கூற்று - மேலாய சொல்; புகழ்.
|
|