5. நடுகற் காதை



மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே


151
உரை
154

       மல்லல் மாஞாலத்து வாழ்வோர் மருங்கின் - வளம் நிறைந்த இப்பெரிய வுலகத்து வாழும் மக்களிடத்து, செல்வம் நில்லாது என்பதை - பொருள் நிலைபெறாது என்பதனை, வெல் போர்த் தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரிற் கண்டனையல்லையோ காவல்வேந்தே-காவற்றொழிலுடைய மன்னனே வெல்லும் போரினையுடைய தமிழ்நாட்டு வேந்தரை எள்ளிய ஆரிய மன்னரிடத்துக் கண்டாயல்லையோ;