எழுமுடி
மார்பநீ ஏந்திய திகிரி - ஏழு முடிகளாற் செய்த ஆரம் பொருந்து மார்பினையுடையாய்
நீ எடுத்த ஆணைச் சக்கரம், வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே - வெற்றிகாணும் வாளினையுடைய
அரசே மேலும் மேலுஞ் சிறப்புறுவதாக;
"எழுமுடி என்பது ஏழு அரசரை வென்று அவர்கள் ஏழுமுடி யானுஞ் செய்ததோராரமாம்" என்பர்
பதிற்றுப்பத்தின் பழைய வுரையாசிரியர். 1"எழுமுடி
கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை" என்பதன்
உரை காண்க.
|