அரும்பொருட்
பரிசிலேன் அல்லேன் யானும் - யான் பெறுதற்கரிய பொருளைப்பெறும் பரிசிலாளனல்லேன்,
பெரும் பேரியாக்கை பெற்ற நல்லுயிர் - மிக்க பெருமையுடைய உடம்பினைப்பெற்ற அறஞ்செய்த
வுயிரானது, மலர்தலை உலகத்து உயிர்போகு பொதுநெறி புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்
- அறிவின் எல்லை கடந்தோய் பரந்த இடத்தினையுடைய உலகத்தின்கண் ஏனைய உயிர்கள்
செல்லும் பொது நெறி யிடத்தே செல்லுதலைப் பொறுத்தலாற்றேன்;
பொருட் பரிசிலே னல்லே னென்றது
நின்மாட்டுப் பொருள் பெறுதற்காக இது கூறுகின்றேனல்லேன் என்றவாறு. பெரும்பேர் யாக்கை
- அரச வுடல். முன்னர் நல்லுயிர் என விதந்தமையின் பின்னர்க்கூறிய உயிர் ஏனைய மக்களுயி
ரென்றவாறாயிற்று. பொது நெறி - பிறந்திறப்பா ரெல்லாரும் செல்லு நெறி; சிறப்பிலா
நெறி புல வரை - அறிவின் எல்லை.
|