நாளைச்
செய்குவம் அறம் எனின் - அடுத்த நாளில் அறஞ்செய்வோம் என்று நாம் கருதின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் - இற்றைப் பொழுதிலேயே கேள்வி யளவேயான
நல்ல உயிரானது விலகினும் விலகும், இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர்
உலகில் முழுவதும் இல்லை - தம் வாழ்நாள் இத்துணைத்தென வரையறை செய்து அறிந்தவர்
கடல்சூழ்ந்த உலகத்தின்கண் யாங்கணும் இல்லை;
நாளை என்பது வருங்கால மென்னும் பொருட்டு.
யாக்கை நிலை யாமையின், இன்றே அறஞ்செய்கவெனக் கூறினான். பிறரும் 1"புன்னுனிமே
னீர்போ னிலையாமை யென்றெண்ணி, இன்னினியே செய்க அறவினை - இன்னினியே, நின்றான்
இருந்தான் கிடந்தான்றன் கேளலறச், சென்றா னெனப்படுத லான்" எனக் கூறுமாறு காண்க.
|