அருந்திறல்
அரசர் முறை செயின் அல்லது - அரிய வலியினையுடைய மன்னர் தம் நீதி செலுத்தினல்லது.
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது என - பெரும்புகழினையுடைய மகளிர்க்குக்
கற்புநிலை சிறப்புறாது என்று, பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை - பண்டைப் பெரியோர்
கூறிய இனிய தமிழ்நாட்டு நன்மொழியை, பார் தொழுது ஏத்தும் பத்தினியாகலின் - இவ்வுலகோர்
வணங்கிப் போற்றற்குரிய கற்புடையாளாகலான், ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து -
ஆத்திமாலை சூடிய சோழ மன்னனுக்கு ஈந்து;
முறை செய்தல் - ஒழுக்கத்தினும் வழக்கினும்
இழுக்கினாரை யொறுத்தல். அரசன் காவ லில்வழி பெண்டிர் கற்புச் சிறவாது என்பதனை,
1"மாதவர் நோன்பும் மடவார் கற்புங்,
காவலன் காவலின்றெனி னின்றால்" என்பதனானறிக. சென்னி-சோழன்; ஆர்புனை சென்னி
என்பதற்கு ஆத்திமாலை புனைந்தமுடி எனலும் அமையும். பத்தினியாகலின் பண்டையோருரைத்த
நல்லுரையை அரசற்களித்து என்க. அளித்தல் - அறியும்படி செய்தல்; கோவலன் ஒழுக்கத்தின்
வழுவினமையால் பத்தினிக் குண்டாகிய துன்பம் கருதப்பட்டது.
|