5. நடுகற் காதை


செங்கோல் வளைய வுயிர்வா ழாமை
தென்புலங் காவல் மன்னவற் களித்து


212
உரை
213

       செங்கோல் வளைய உயிர் வாழாமை - செவ்விய கோல் கோட உயிர்வாழாத் தன்மையை, தென்புலங்காவல் மன்னவற்களித்து - தென்னாடு புரக்கும் பாண்டியனுக்கு அளித்து;

       வளைய, காரணப் பொருட்டு. வாழார் என்னும் புகழினை என்க. பாண்டியர் கோல்கோடின் உயிர் வாழார் என்பது 1"செங்கோல் வளைய வுயிர் வாழார் பாண்டியர்" எனப் பின்னரும் கூறப்படுதல் காண்க.


1. சிலப். 29. "செங்கோல் வளைய".