வஞ்சினம்
வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை - மன்னர் தாம்
கூறிய சூள் நிறைவுற்ற பின்னல்லாது அதன் முன்னர்ச் சிறிதும் கொடிய சினம் நீங்கப்பெறார்
என்பதனை, வடதிசை மருங்கின் மன்னவர் அறிய - வடநாட்டு வேந்தர்கள் உணரும் வண்ணம்,
குடதிசை வாழுங் கொற்றவற்கு அளித்து - மேற்றிசையில் வாழும் சேர வேந்தற்கு அளித்து;
அல்லதை, ஐ இடைச்சொல். விளிதல்
- கெடுதல்; ஈண்டு நீங்குதல். வேந்தர் - தமிழ் மன்னரென்றுமாம்.
|