5. நடுகற் காதை



220

மதுரை மூதூர் மாநகர் கேடுறக்
கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து
நந்நா டணைந்து நளிர்சினை வேங்கைப்
பொன்னணி புதுநிழற் பொருந்திய நங்கையை


218
உரை
221

       மதுரை மூதூர் மாநகர் கேடுற - பழம்பதியாகிய மதுரைப் பெருநகர் அழிவுற, கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து - தன் சினத்தானே வெவ்விய எரியினை முலைக் கண் தோற்றுவித்து, நன்னாடு அணைந்து நளிர்சினை வேங்கைப் பொன் அணி புதுரிழற் பொருந்திய நங்கையை - நமது நல்ல நாட்டினை அடைந்து குளிர்ந்த கிளையினையுடைய வேங்கையின் பொன்போலும் அழகு செய்யும் புதிய நீழலில் தங்கிய மகளை;

       1"கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்" என்றார் பதிகத்தும். பொன்போலும் புதிய மலரையணிந்த வேங்கையென்றுமாம்.


1. சிலப். பதி, 44.