|
30
|
காசறைத் திலகக் கருங்கறை
கிடந்த
மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட,
குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார்
நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி
|
|
காசறைத்
திலகக் கருங்கறை கிடந்த - கத்தூரித் திலகமாகிய கரிய மறுத் தங்கிய, மாசுஇல் வாண்முகத்து-குற்ற
மற்ற ஒள்ளிய முகத்தினையும், வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார் -
தேனுகரவந்த வண்டுடனே சுருண்டு கிடந்த கூந்தலையும் மாலையினையும் ஒப்பனையையும் காணும் பொருட்டு,
நிழல்கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி - உருவினை வெளிப்படுத்தும் கண்ணாடியைத் தமக்கு
முன்னே நிறுத்தி ;
கறை - களங்கம். முகத்துடன் குழல் கோதை
ஆகியவற்றின் கோலத்தைக் காணவென்றுமாம். காலுதல் - வெளிப்படுத்தல் ; வட்டமாயிருத்தலின்
மண்டிலம் எனப்படுவதாயிற்று ; 1"நிழல்கான்
மண்டில நோக்கி யழல்புனை, யவிரிழை திருத்துவாள்" 2"மாசறக்
கண்ணடி வயக்கி வண்ணமுந், தேசுமொளியுந் திகழ நோக்கி" என்பன அறியற்பாலன. நிழல்காண்
மண்டிலமெனப் பாடங் கொண்டாருமுளர்.
|
1.
பரிபா. 21. 2. பரிபா. 12.
|
|