5. நடுகற் காதை





35

கவணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப்
புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க்
குரல்குர லாக வருமுறைப் பாலையில்
துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின்
அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின்
மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து


31
உரை
36

       வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப் புணர்புரி நரம்பின் பொருள்படு பத்தர் - வளைந்த தண்டினையும் இசை பொருந்துதலையுடைய நரம்பினையும் பத்தரினையுமுடைய சீறி யாழை எடுத்தணைத்து, குரல் குரலாக வருமுறைப் பாலையின் - குரல் குரலாக வரும் செம்பாலைப் பண்ணுடன், துத்தம் குரலாத் தொன்முறை இயற்கையின் - துத்தம் குரலாய படுமலைப் பாலையும் அம்முறையே செவ்வழிப் பாலை முதலியனவும், அம் தீங் குறிஞ்சி - அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகியவற்றை, அகவல் மகளிரின் - பாடுதலையுடைய மகளிரால் மைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்து அயர்ந்து - மைந்தர்க்குச் சிறந்த விருந்தினையும் செய்து ;

       கோடு நரம்பு பத்தர் ஆகியவற்றையுடைய சீறியாழ் எனக் கூட்டுக. பாலை, குறிஞ்சி யென்னும் பண்களினியல்பினை ஆய்ச்சியர் குரவையிற் கூறியவாற்றானறிக. நிறுத்தித் தழீஇ என்னுமெச்சங்கள் அகவல் மகளிரென்னும் பெயரில் அகவுதற் றொழிலொடு முடிந்தன.