"முடிமன்னர்
மூவருங் . . . தோழி நான் கண்டீர்"
முடிமன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ வடபேர் இமய மலையிற் பிறந்து - தமிழ்நாட்டு
முடியுடைப் பேரரசர் மூவரும் பேணிக் காக்குந் தெய்வத் தன்மையுடைய வடதிசைக் கண்ண தாய
இமயமலையிற்றோன்றி, கடுவரற் கங்கைப் புனல் ஆடிப் போந்த - விரைந்து வருதலுடைய கங்கை
நீரில் மூழ்கிப் போந்த, தொடிவளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர் - வளைந்த
வளையணிந்த தோளினையுடையாட்கு யான் தோழி யாவேன்,சோணாட்டார் பாவைக்குத் தோழி
நான் கண்டீர் - சோழ நாட்டார் புதல்வியாகிய இவட்கு யான் தோழியாவேன்;
மூவருங் காத்தோம்பு மலை - மூன்று மன்னருந் தமது இலச் சினையிட்டுக் காக்கும் மலை.
தொடிவளை - வளைந்த வளையல். கண் ணகியின் மகளுருத் தோற்றத்தைச் சோணாட்டார் பாவை
என்பதனாலும், தெய்வ வுருத் தோற்றத்தை மலையிற் பிறந்து என்பதனாலும் குறிப்பிட்டாள்.
கண்டீர், முன்னிலையசை. பின் வருவனவும் இன்ன.
|