''வானவனெங்கோ
. . . மகள்''
வானவன்
எங்கோ மகள் என்றாம் - சேரனாகிய எம் அரசனுடைய புதல்வியென்று கூறினேம் நாம், வையையார்கோன்
அவன்றான் பெற்ற கொடி என்றாள் - அவள்தான் பாண்டியன் பெற்ற மகள் என்றாள், வானவனை
வாழ்த்துவோம் நாம் ஆக - நாம் நம்மரசனாகிய சேரனை வாழ்த்துவோமாக, வையையார்
கோமானை வாழ்த்துவாள் தேவமகள் - தெய்வமாகிய கண்ணகி பாண்டியனை வாழ்த்தாநிற்பள்;
கோனாகிய
அவன் என்க. நாம் வாழ்த்துவோமாக எனப் பிரித் துக் கூட்டுக. சேரன் பிரதிட்டித்தமையால்
''எங்கோ மகளென் றாம்'' என்று கூறினார். தேவமகள் வாழ்த்துவாளாக நாம் வாழ்த்து
வோம் எனலுமாம்.
|