''மலையரையன்
. . . தொல்குலமே''
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய
இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன்
நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்
றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த
வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;
இமயமலைக்
கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார்.
நிலவரசர் - கனகனும் விசயனும்.
|