6. வாழ்த்துக் காதை



15.

   எல்லா நாம்:

காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்;



15
உரை
15

"எல்லா நாம் - தோழீ நாம்;''

        காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்-காவிரி சூழ்ந்த சோணாடுடையானைப் பாடுவேம் மலர்மிக்க கூந்தலை யுடையாய் புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுவேம்;

       
கூந்தல், விளி. புகார் பாடுதும் என்க. புகார் என்பதன்கண், இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.