''பொன்னிலங்கு
. . . பந்தடித்துமே''
பொன்இலங்கு பூங்கொடி-விளங்கும்
பொற்பூங்கொடி போல் வாய், பொலம் செய்கோதை வில்லிட-பொன்னாற் செய்த மாலை
ஒளிவிடவும், மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப - மின் போல் விளங்கும் மேகலைகள்
ஒலிக்கவும், எங்கணும் தென்னன் வாழ்கவாழ்க என்று சென்று பந்து அடித்துமே - எவ்விடத்தும்
பாண்டியன் வாழ்வானாகவென்று வாழ்த்திச் சென்று பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன்
வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்க்கரசன் வஞ்சத்தால் இட்ட ஆரமணிந்த மார்பினையுடைய
பாண்டியன் வாழ்கவென்று வாழ்த்திப் பந்தடிப்போம்;
பொன்னிலங்கு பூங்கொடி, விளி.
எங்கணுஞ் சென்று என்க. பந்து - தெறிக்கும் பந்து. தேவர் ஆரமிட்டதனை, 1''தேவர்கோன்
பூணாரந் தென்னர் கோன் மார்பினவே'' என முன்னர்க் கூறியதனானும் அறிக. அடுக்குகள்
பன்மையும் உவகையும் பற்றியன. அடித்தும், தன்மைப் பன்மை எதிர்கால முற்று. கந்துகம்
- பந்து. இங்ஙனம் பாடிக்கொண்டு, பந்தாடுவரென்க.
|