"மடம்படு
சாயலாள் ... தாயர் நான் கண்டீர்"
மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் - அழகு தோன் றும் மென்மைத் தன்மையுடையளாய
மாதவியை வெகுளா ளாய்,காதற் கணவன் கைப்பற்றி - அன்பு நிறைந்த தன் கணவனது கையினைப்
பிடித்து, குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த - குடம் புகுதலில்லாத கிணறுகளையுடைய
கொடிய காட்டிடத்தே சென்ற, தடம்பெருங் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர் - மிகப்
பெரிய கண்ணினை யுடையாட்கு நான் செவிலித் தாயாவேன், தண் புகார்ப் பாவைக்குத் தாயர்
நான் கண்டீர் - தண்ணிய புகார் நகரத்துத் தோன்றிய பாவைக்கு நான் செவிலித் தாயாவேன்;
கடம் படாள்- வெகுளுங் கடனில்லாளாய்.
மடம் - அழகு. நீரின்மையால் இறைப்பா ரின்மையின் குடம் புகாக் கூவல் என்றார். சாயலாளாய
கண்ணி யென்க; சாயலாளாய மாதவி யெனலுமாம். தாயர் - செவிலித்தாய்; ஒருமை.
|