''பின்னுமுன்னும்
. . . பந்தடித்துமே''
பின்னும்முன்னும்
எங்கணும் பெயர்ந்து உவந்து எழுந்து உலாய் மின்னு மின்னிளங்கொடி வியன் நிலத்து இழிந்தென
- மின்னுகின்ற கோமள மின்னற்கொடி பெரிய நிலத்து இறங்கிய தென்னப் பின்னிடத்தும்
முன்னிடத்தும் மற்றெவ்விடத்தும் சென்று மகிழ்வு கொண்டு துள்ளி உலாவி, தென்னன் வாழ்க
வாழ்க என்று சென்று பந்து அடித்துமே - பாண்டியன் நீடு வாழ்வானாகவென்று வாழ்த்திப்
பெயர்ந்து பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்களது
ஆரம் பூண்ட மார்பினை யுடையான் வாழ்கவென்று வாழ்த்திப் பந்தடிப்போம்;
கொடி இழிந்தென உலாய் என்க.
|