''துன்னி
வந்து . . . பந்தடித்துமே''
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள்நிலந் தன்னில் நின்றும் அந்தரத்து எழுந்தது
இல்லை தான் என - அணுகிவந்து கையிடத்திருந்தது மில்லை நிலத்தினின்றும் வானத்து எழுந்த
தும் இல்லை என்று கூறும் வண்ணம், தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே
- பாண்டியன் வாழ்வானாக வென்று கூறிச் சென்று பந்தடிப்போம், தேவர் ஆர மார்பன்
வாழ்க என்று பந்து அடித்துமே - தேவர்களது ஆரம்பூண்ட மார்பினை யுடையான் வாழ்வானாகவென்று
கூறிப் பந்தடிப்போம்;
கைத்தலத்
திருந்ததில்லை. நீணிலந்தன்னி னின்று மெழுந்ததில்லை என்றது விரைவுபற்றி என்க. இல்லை
இல்லையெனச் சென்று பந்தடித்தும் என்க.
|