''தீங்கரும்பு . . . பாடல்''
தீங்கரும்பு நல் உலக்கையாகச்
செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் - இனிய கரும்பினை நல்ல
உலக்கையாகக் கொண்டு கொழுவிய முத்தினைப் பொலிவுற்ற காஞ்சி மரத்து நிழற்கண்ணே
குற்றுவாராய புகார் நகரத்து மங்கையர், ஆழிக் கொடித் திண்டேர்ச் செம்பியன்-வலிய
உருளுடைய கொடி கட்டிய திண்ணிய தேரினையுடைய சோழனது, வம்பு அலர் தார்ப் பாழித் தடவரைத்
தோள் பாடலே பாடல் - மணம் பரந்த மாலை சூடிய வலிய பெரிய மலைபோலுந் தோளினைப்
பாடும் பாடலே சிறப்புடைப் பாடலாம், பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் - அம் மகளிர்
ஆர்த்தலைச் செய்யும் பாடலே சிறந்த பாடலாம்;
வள்ளை - உலக்கைப்பாட்டு. பூங்காஞ்சி
- மலர்க்காஞ்சி எனலுமாம். அவைத்தல் - குறுதல். பாழி-வலிமை, பெருமை. ஆழி-ஆக்கினா
சக்கரமுமாம். ஆரிக்கும்-ஆதரிக்கு மென்றுமாம். மருதவளம் கூறியவாறு.
|