6. வாழ்த்துக் காதை



28.

சந்துரற் பெய்து தகைசால் அணிமுத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டாற்
கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்
பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடல்;




28
உரை
28

''சந்துரல் . . . பாடல்''

        சந்து உரல்பெய்து தகைசால் அணிமுத்தம் வஞ்சிமகளிர் குறுவரே வான் கோட்டால்-தகுதி மிக்க அழகிய முத்தினைச் சந்தனமரத் தாலாய உரலிற் போகட்டுச் சிறந்த யானைக் கொம்பினாற்

       
குற்றுவாராய வஞ்சிநகரத்து மங்கையர், கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் - பகைவரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் மாலையை யணிந்த சேர மன்னனது கடம்பின் முதலைத் துமித்த பரந்த இவ்வுலகினை மூடிய மொழியினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல், பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல் - உள்ளத்தினை ஈர்க்கும் பனந்தோட்டினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல்;

       
முத்தம் பெய்து கோட்டாற் குறுவர் மகளிர் எனக் கூட்டுக. தார் - தூசிப்படையுமாம். சேரனது வார்த்தை; அது கடம்பு எறிந்த வார்த்தை நிலம் போர்த்த வார்த்தை என்க; வார்த்தை - புகழ்; 1 ''மண்டேய்த்த புகழினான்'' என்பதும் அதன் உரையும் நோக்குக. மலைவளங் கூறியவாறு. முத்தம் மூன்று நிலத்தினும் உளதாதல் ஓர்க..


1சிலப் , 1 : 36