"தற்பயந்தாட்கு
.... தோழி நான் கண்டீர்"
தற்பயந்தாட்கு இல்லை தன்னைப்
புறங்காத்த எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை - தன்னை ஈன்றாட்கும் ஒரு
சொற் கூறாளாய்த் தன்னைக் காத்தோம்பிய செவிலியாகிய என்னை ஈன் றாட்கும் எனக்கும்
ஓர் சொற் கூறாளாய், கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த - கற்பினைக் கடனாக
மேற்கொண்டு கண வன் பின்னே போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்
- பொன்னாலாய தொடியினை யுடையாட்கு யான் தோழியாவேன், பூம்புகார்ப் பாவைக்குத்
தோழி நான் கண்டீர் - பொலிவினையுடைய புகாரில் தோன்றிய பாவைக்கு யான் தோழி
யாவேன்;
தற்பயந்தாள்
-நற்றாய்; பயந்தாட்குமென உம்மை விரிக்க, செவிலியின் மகளே தோழியாதல் முறைபற்றி,
"தன்னைப் புறங் காத்த வெற்பயந்தாட்கும்" என்றாள். 'தற்பயந்தாட்கில்லை' என்ற
வழி, ஓர் சொல் என்பது கூட்டியுரைக்க. உம்மைகள் எண்ணும்மை யோடு சிறப்பும்மையுமாம்.
|