"ஐயந்தீர்
காட்சி . . . கண்டாயோ தோழீ"
ஐயந்தீர் காட்சி அடைக்கலம்
காத்து ஓம்ப வல்லாதேன் - கவுந்தி யடிகள் அளித்த அடைக்கலப் பொருளைப் பேணிக்காத்தற்கு
மாட்டாத யான், பெற்றேன் மயல் என்று உயிர்நீத்த - பித்துற்றேன் என்று கூறி உயிர்விட்ட,
அவ்வை மகள் இவள்தான் அம் மணம் பட்டிலா வை எயிற்று ஐயையைக் கண்டாயோ தோழீ -
மாதரியின் மகளாகிய வதுவை செய்யப் பெறாத இக் கூரிய பற்களையுடைய ஐயையைத் தோழீ
பார்த்தனையோ, மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ-மாமியின் மடப்பத்தை யுடைய மகளைத்
தோழீ பார்த்தனையோ;
ஐயந்தீர்
காட்சி - தெளிந்த அறிவு; அதனையுடைய கவுந்தியடி கட்கு ஆகுபெயர். மயல் - பித்து. அவ்வை
என்றது ஈண்டுத் தாய் என்னும் பொருள் குறியாது முதியாள் என்பது குறித்து நின்றது. மாதரி
இறந்தமையால் மணம் படுத்துவாரின்மையின், மணம்பட்டிலா ஐயை என்றாள். வை - கூர்மை.
முன்னர், ஐயையைக் கண்ணகியின் 1
"நாத்தூண்" எனக் கூறினமையான், கண்ணகிக்கு மாதரி மாமி யாயினாள் என்க.
|