"என்னேயிஃ
தென்னே ... தோன்றுமால்"
என்னே யிஃது என்னே யிஃது என்னே
கொல்- ஈதென்ன வியப்பு, பொன்னஞ் சிலம்பிற் புனைமேகலை வளைக் கை - பொன்னாலாகிய
அழகிய சிலம்பினையும் புனையப்பட்ட மேகலையினையும் வளைசேர்ந்த கையினையும், நல்வயிரப்
பொன் தோட்டு நாவலம் பொன்னிழை சேர் - குற்றமற்ற வயிரம் பதித்த பொற்றோட்டினையும்
சாம்பூநதப் பொன்னினாலாகிய ஏனை அணிகளையும் உடைய, மின்னுக்கொடி ஒன்று மீவிசும்பில்
தோன்றுமால் - ஓர் மின்னற்கொடி உயர்ந்த வானத்திடத்துக் காணப்படுகின்றது;
அடுக்கு
வியப்பு மிகுதியை உணர்த்திற்று. நாவலம் பொன் - சாம்பூநதமென்னும் பொன். மின்னுக்கொடி
என்றது கண்ணகியை.
|