|
90
95
|
மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
அங்குறை மறையோ னாகத் தோன்றி
உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து
குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்
ஆங்கது கொண்டு போந்தே னாதலின்
ஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றி
அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்
மன்னர் கோவே மடந்தையர் தம்மேல்
தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப
|
|
மங்கல
மடந்தை கோட்டத்து ஆங்கண் அங்கு உறை மறையோன் ஆகத் தோன்றி - மங்கலா தேவியின்
கோயிலிடத்து ஆங்கே வாழும் ஓர் அந்தணனாக வெளிப்பட்டு, உறித்தாழ் கரகமும் என் கைத்தந்து
குறிக்கோள் கூறிப் போயினன் வாரான் - உறியிலே தங்கிய கமண்டலத்தை என்னிடம் கொடுத்து
அதனைக் குறிக்கொண்டு காக்குமாறு சொல்லிச் சென்றனன் பின்பு வந்திலன், ஆங்கு அது கொண்டு
போந்தேன் ஆதலின் - அவ்விடத்தினின்றும் அக் கரகத்தினைக் கொண்டு வந்தேன் ஆகலான்,
ஈங்கு இம் மறையோள் தன் மேல் தோன்றி அந்நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் -
இப்பொழுது இப் பார்ப்பனியிடத்து வெளிப்பட்டு அந்நீரினைத் தெளிப்பாய் என்று அறிவிற்
சிறந்த சாத்தன் சொல்லினன், மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்து ஈங்கு அறிகுவம்
என்று அவன் தெளிப்ப - மன்னர் மன்ன இம் மங்கையர்மீது இப்போழ்து தெளித்து அதனை அறிவோம்
என்று கூறி அம் மாடலன் அந்நீரினைத் தெளிக்க ;
நீங்கிய சாத்தன் மறையோனாகத் தோன்றித்
தந்து போயினன் என்க. மறையோள் - தேவந்தி. அறிந்தோன் - சாத்தன். |
|