|
110
|
வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தேன்
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன்
எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ
|
|
வருபுனல்
வையை வான்துறைப் பெயர்ந்தேன் - இடையறாது வருநீரினை யுடைய வையை யாற்றின் பெரிய துறையினின்றும்
மீண்ட யான், உருகெழு மூதூர் ஊர்க் குறு மாக்களின் வந்தேன் கேட்டேன் மனையில் காணேன்
- அழகு மிக்க நகரத்து இளையோரால் இக்கொடுஞ் செயலைக் கேள்வியுற்று இல்லம் புக்கேன்
ஆண்டு நின்னைக் கண்டிலேன், எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ - எம் தந்தை போல்வாய்
இளம் பருவமுடையாய் அங்ஙனமாய நீ யாண்டுச் சென்றொளித்தனையோ ;
பெயர்ந்தேன் வந்தேன் கேட்டேன் என்பன
முற்றெச்சங்கள். கேட்டேன் வந்தேன் என மாறுக. எந்தாய் என்றது கோவலனை. இது மாதரி
கூற்று. |
|