7. வரந்தரு காதை





115

என்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப்
பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன்
குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர்

முதியோர் மொழியின் முன்றில் நின்றழத



112
உரை
115

       என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி - அவ்விடத்தே இவ்வாறு கூறிப் புலம்பி வருந்தி ஏக்கமுற்று, பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன்முன் - திருமகள் தங்கும் மார்பினையுடைய போரை விரும்பியோனாய செங்குட்டுவன் எதிரே, குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ - மழலைச் சொல் பொருந்திய சிவந்த வாயினையும் குறிய வளையினையும் உடைய மங்கையர் முதிர்ந்த பெரியோர் கூறுமாறு போலக் கோயில் முன்னிடத்தே நின்று புலம்ப ;

       அவன் தெளிப்ப ஒளித்த பிறப்பு வந்துற்றதாகலான் குறுந்தொடி மகளிர் போர் வெய்யோன் முன் மாதே வாராய் என்மகன் வாராய் இளையாய் எங்கொளித்தாயோ என்று அரற்றி ஏங்கி முதியோர் மொழியின் முன்றில் நின்று அழவென்க.