7. வரந்தரு காதை





தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன்
மாடல மறையோன் றன்முக நோக்க
மன்னர் கோவே வாழ்கென் றேத்தி
முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன்



116
உரை
119

       தோடு அலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தன்முகம் நோக்க - இதழ்விரிந்த பனம்பூ மாலையினையும் கட்டிய வீரக் கழலினையும் உடைய மன்னவன் மாடலனாகிய அந்தணன் முகத்தை நோக்கிய வளவிலே, மன்னர் கோவே வாழ்கென்று ஏத்தி முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன் - பூணூல் அணிந்த மார்பினையுடைய மாடலன் அரசர்க்கரசே நீடு வாழ்வாயாகவென்று போற்றி அரசன் கருதியதனைக் கூறுபவன் ;