|
135
|
ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்
போய பிறப்பிற் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்
|
|
ஆயர்
முது மகள் ஆயிழைதன்மேல் போய பிறப்பில் பொருந்திய காதலின் - இடையர் குலத்து முதியளாகிய
மாதரி கண்ணகியிடத்து முந்தைப் பிறவியிற் பொருந்திய அன்பு காரணமாக, ஆடிய குரவையின்
- தான் ஆடிய குரவையின் பயத்தால், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறு மகள்
ஆயினள் - அராவணையில் பள்ளி கொண்டோனுக்குத் தொண்டு செய்யும் குடும்பத்தானது புதல்வியாயினள்
; ஆதலால் ;
ஆயிழை - கண்ணகி, அரவணைக் கிடந்தோன்
என்றது திருவனந்தபுரத்துத் திருமாலை. காதலானும் குரவையானும் சிறுமகளாயினளென்க. ஆதலால்
என ஒரு சொல் வருவிக்க. |
|