|
40
45 |
குரற்றலைக் கூந்தல் குலைந்துபின்
வீழத்
துடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய்
மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள்
திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்
கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள் உயர்மொழி கூறித்
தெய்வமுற் றெழுந்த தேவந் திகைதான்
|
|
குரல்தலைக்
கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்துக்களைத் தன்னிடத்தேயுடைய கூந்தல் சரிந்து புறத்தே
வீழ்ந் தலைய, துடித்தனள் புருவம் - புருவந்துடித்தாள், துவர் இதழ்ச் செவ்வாய் மடித்து
எயிறு அரும்பினள் - சிவந்த வாயின் பவளம் போன்ற உதடுகளை மடித்துச் சிரித்தனள், வருமொழி
மயங்கினள் - பேசும் சொற்கள் குழறினள், திருமுகம் வியர்த்தனள் - அழகிய முகம் வியர்வை
கொண்டனள், செங்கண் சிவந்தனள் - சிவந்த கண்கள் சேக்கப் பெற்றாள், கைவிட்டு ஓச்சினள்
- கையை வீசி உயர்த்தினாள், கால் பெயர்த்து எழுந்தனள் - காலைப் பெயர்த்துத் துள்ளினள்,
பலர் அறி வாராத் தெருட்சியள் மருட்சியள் - பலரும் அறியவொண்ணாத தெளிந்த உணர்வுடையவள்
மயக்க முடையவள், உலறிய நாவினள் - காய்ந்த நாவுடையள் உயர்மொழி கூறித் தெய்வம்உற்று
எழுந்த தேவந்திகைதான் - மேலான சொற்களை மொழிந்து தெய்வமேறித் தோன்றிய தேவந்தி
;
துடித்தனள் முதலியவற்றை முற்றெச்சமாக்கி,
அவற்றைக் கூறி என்பதனொடு முடிக்க. குரற்றலைக் கூந்தல் என்பது தொடங்கி உலறிய நாவினள்
என்பதன் காறுமுள்ளவை தேவந்தி தெய்வமுற்ற மையான் எய்திய தன்மைகள். புருவந்துடித்தனள்
என்பது முதலியவற்றில், சினைவினை முதலொடு முடிந்தன. 1"தெய்வ
முற்றோ னவி நயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையும், மடித் தெயிறு கௌவிய
வாய்த்தொழி லுடைமையுந், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய நிலையுஞ் சேர்ந்த
செருக்கும், எய்து மென்ப வியல்புணர்ந் தோரே" என்பது அறியற்பாற்று.
|
1.
சிலப், பக். 56.
|
|