|
|
மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன்
தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து
கேளிது மன்னா கெடுகநின் தீயது
|
|
மன்னவன்
விம்மிதம் எய்தி அம் மாடலன் தன்முகம் நோக்கலும் - செங்குட்டுவன் வியப்புற்று அம்
மாடலனது முகத்தை நோக்கிய வளவிலே, தான் நனிமகிழ்ந்து - அவன் மிக மகிழ்ச்சியுற்று,
கேள்இது மன்னா கெடுகநின் தீயது - வேந்தே நினது தீமை கெடுவதாக இவ் வரலாற்றினைக் கேட்பாயாக
வென்று கூறுவான்; |
|