|
|
நானம் நல்லகில் நறும்புகை
யன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல |
|
நானம்
நல் அகில் நறும்புகை அன்றியும் - அவர், கூந்தற்கு நாற்றமுடைய நல்ல அகிற்புகையை ஊட்டுதலன்றியும்,
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - மான்மதச் சாந்தை அணிதற்கு அதனோடு தமக்குளதாகிய
கண்ணோட்டம் யாதோ ;
நானம் - நெய்யுமாம். மான்மதம் -
கத்தூரி, வந்ததை - பொருந்திய கண்ணோட்டம் ; வந்த உறவு எனலுமாம். |
|