|
|
திங்கண்முத் தரும்பவுஞ்
சிறுகிடை வருந்தவும்
இங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல |
|
திங்கள்
முத்து அரும்பவும் - மதிபோலும் முகத்தில் முத்துப் போலும் வியர் தோன்றவும், சிறுகு இடை
வருந்தவும் - நுண்ணிய இடை ஒசியவும், இங்கு இவை அணிந்தனர் - இவ் வுழி இவற்றை அணிந்தாராகலின்,
என் உற்றனர்கொல் - அவர்கள் என்ன பித்தேறினார்களோ ;
திங்கள் முத்து என்பன காதலும் நலனும்
நிலைக்களனாகத் தோன்றிய 1பண்புவமத்
தொகை ; குறிப்பினாற் பொருள் உணர நின்றன ; ஆகுபெய ரென்பாருமுளர்.
மங்கலவணியும் சின்மலரும் அகிற்புகையும்
தொய்யிலுமே பாரமாய் அரும்பவும் வருந்தவும், பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும்
அணிந்தார் என முற்கூறியவற்றைக் கருதிக் கூறியவாறு. |
1.
தொல் பொருளதி. 278. பேரா. உரை.
|
|