|
75 |
அரும்பெறற் பாவாய்
ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே |
|
அரும்பெறல்
பாவாய் - பெறுதற்கரிய பாவையே, ஆர் உயிர் மருந்தே - அரிய உயிரை நிலைபெறச் செய்யும்
மருந்தே, பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - பெருங் குடிப் பிறந்த வணிகனுடைய பெருமை பொருந்திய
மடப்பத்தை யுடைய புதல்வியே,
காட்சியின் உயிர் மயக்குறுதலிற் கொல்லியற்
பாவாய் என்றும், அவ்வாறு அழியுமுயிரை இமைப்பிற் றருதலின் ஆருயிர் மருந்தே என்றுங் கூறினான்.
உயிர் மருந்து - மிருத சஞ்சீவினி என்பர். |
|