|
80 |
மலையிடைப் பிறவா மணியே
யென்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா இசையே யென்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று
உலவாக் கட்டுரை பலபா ராட்டித |
|
மலையிடைப்
பிறவா மணியே என்கோ - மலையிற் பிறவாத மணியே என்பேனோ, அலையிடைப் பிறவா அமிழ்தே
என்கோ - கடலிற் பிறவாத அமிழ்தே என்பேனோ, யாழிடைப் பிறவா இசையே என்கோ - யாழிற்
பிறவாத இசையே என் பேனோ, தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை என்று - நீண்ட கரிய
கூந்தலையுடைய தையலே நின்னை என்று, உலவாக் கட் டுரை பல பாராட்டி - தொலையாத கட்டுரை
பலவற்றால் நலம் பாராட்டி,
அலை, ஆகுபெயர். தையால் நின்னை என்கோ
என்கோ என்கோ என்று பாராட்டி யென்க.
[அடி. மலையிடைப் பிறக்கு மணி குழையாமையின்
அதிற் பிறவா மணியே யென்பேனோ, அலையிடைப் பிறக்கும் அமிர்திற்கு இவ்வடிவின்மையின்
அதனிற் பிற வாத அமுதே யென்பேனோ, யாழ் கட்கின்னா தாகலின் அதனிடைப் பிறவாத இசையே
யென்பேனோ வெனத் தெரிதரு தேற்ற வுவமை யென்னும் அலங்காரமும், மலை கடல் என விரோதமும்,
பின்வருநிலை யென்னும் அலங்காரமும் புலப்படுத்தினா ரென வுணர்க.] . |
|