2. மனையறம்படுத்த காதை

மயன்விதித் தன்ன மணிக்கா லமளிமிசை
நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிக


12
உரை
13

       மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி--எழுநிலை மாடத்து இடை நிலைக்கண்ணே மயன் நிருமித்து வைத்தாலொத்த அழகிய கால்களையுடைய கட்டிலின்மீது இருந்தவளவில், மயன் - தெய்வத் தச்சன் விதித்தல் - மனத்தால் நிருமித்தல், மணி - பவழம் முதலியவுமாம், நெடுநிலை - எழுநிலை. இடைநிலம் - நான்காம் நிலம்.