|
50
|
அறுமுக ஒருவனோர் பெறுமுறை
யின்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது |
|
அறுமுக
ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும் - ஆறு திருமுகத்தையுடைய ஒப்பில்லானாகிய முருகன் இவ்வாறு
ஓர் உரிமையின்றியும், இறுமுறை காணும் இயல்பினின் அன்றே - யான் துன்புறு முறைமையைத்
தன் கண்ணாற் காண்டல் கார ணத்தானன்றே, அம் சுடர் நெடுவேல் ஒன்று - தன் கையிலுள்ள
அழகிய சுடரையுடைய நெடிய வேலொன்றையும், நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது
- நின் முகத்திலே சிவந்த கடையையுடைய குளிர்ச்சி பொருந்திய கண் இரண்டுமாம்படி ஈத்தது
;
பெறுமுறையின்றியும் - உரிமையின்றியும்
; தனக்குப் பெறுங் கூறு ஒன்றில்லை யாகவும் எனினு மமையும். இறுமுறை - வருந்து முறைமை ; சாக்காடுமாம்
; இது,
1"
கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின்
"
என்றாற் போல்வது. இரண்டா ஈத்தது
- இரண்டாக நிருமித்துத் தந்தது ;
2"
ஓக்கிய முருகன் வைவே லோரிரண் டனைய கண்ணாள் "
என்பது காண்க. ஈத்தது, தொழிற் பெயர்.
ஒருவன் ஈத்தது காணும் இயல்பினின் என முடிக்க. இவற்றுட் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப்
பாராட்டி, இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழு தப்படாதனபாராட்டுவான். |
1.
கலி. 4. 2. சீவக. பதுமை. 126.
|
|