2. மனையறம்படுத்த காதை



15





20





25
கழுநீ ராம்பல் முழுநெறிக் குவளை

அரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப்

புரிகுழ லளகத்துப் புகலேக் கற்றுத்
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்

கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து


14
உரை
25

       (கழுநீராம்பல் ........ காதலிற் சிறந்து) கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை - கழுநீரும் சேதாம்பலும் முழுநெறியாகிய செங்கழுநீரும், அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை - அரும்பு கட்டவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரையும் ஆகிய, வயற் பூ வாசம் அளைஇ - நீர்ப்பூக்களின் மணத்தினைக் கலந்துண்டு, அயற் பூ - அவற்றின் வேறாய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெண்தோட்டு - மேன்மை பொருந்திய தாழையின் விரிந்த வெள்ளிய தோட்ட கத்தும், கோதை மாதவி சண்பகப் பொதும்பர் - சண்பகக்காவிலுள்ள மாலைபோலும் மாதவிப் பூவினிடத்தும், தாது தேர்ந்து உண்டு - தாதினை ஆராய்ந்து உண்டு போந்து, மாதர் வாள் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் திரிதரு சுரும் பொடு - ஒள்ளிய முகத்தினையுடைய மாதருடைய புரிந்த குழற்சியையுடைய கூந்தலில் உண்டாகிய கலவை மணம் பெறுதற்கு ஏக்கற்றுப் புகுதற்கு வழிகாணாமற் சுழலுகின்ற சுரும் போடும், செவ்வி பார்த்து - செவ்வியறிந்து, மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து - மணிக் கோவையாலே ஒழுங்குபட நிரைத்து வகுத்த அழகினை யுடைய சாளரத்தின் குறிய புழைகளால் நுழைந்து, வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டு - வண்டோடும் புகுந்த மணத்தினையுடைய தென்றலைக் கண்டு, மகிழ்வு எய்திக் காதலிற் சிறந்து - மகிழ்ச்சியுற்றுக் கலவியை விரும்பிக் காதல் மிகுதலால்,

       முழுநெறி - இதழொடியாத முழுப் பூ. குவளை-ஈண்டுச் செங் கழுநீர் ; 1குவளைக் கூம்பவிழ் முழுநெறி" என்பதும், அதனுரையும் நோக்குக. சேதாம்பல் ஏனைய போன்று பகலில் மலரும் பூவன்றாயினும் அவை விரியுங் காலத்து இது குவிதலின்மையின் ஒருங்கு கூறினார். பொதும்பர் - மரச் செறிவு. உண்டு என்பதனை முன்னுங் கூட்டி, அளைஇ உண்டு, தேர்ந்துண்டு என்க. மாதவி - குருக்கத்தி. சண்பகத்தோடு மலர்தலின் தேர்ந்துண்டு என்றார், சண்பகம் வண்டுணா மலர் மரமாகலின் வாண்முகத்து மாதர் எனவும், அளகத்து ஏக்கற்று எனவும், புகற்குத் திரிதரு எனவும், மணித்தாமத்து எனவும், மாலை நிரைத்து எனவும் மாறுக. செவ்வி - இவர் மகிழுஞ் செவ்வி. மாலை - ஒழுங்கு. சுரும்போடும் வண்டோடும் புக்க வென்க. மணவாய்த் தென்றல் - மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல்; வாய் - இடம்.

       அளைஇ உண்டு தேர்ந்துண்டு ஏக்கற்றுத் திரிதரு சுரும்போடும் வண்டோடும் புக்க தென்றல் என்க.

1. புறம், 116.