|
|
விரைமலர் வாளியொடு
வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத் தரமிய மேறிச் |
|
விரைமலர்
வாளியொடு வேனில் வீற்றிருக்கும் நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி - அங்ஙனம் காதல்
மிகுதலால் அவர்கள் நிரைத்த நிலைகளையுடைய மாடத்தின் இடைநிலத்து நின்றும் மணத்தினையுடைய
மலர்க்கணையோடே காமன் வீற்றிருக்கும் மேனிலமாகிய நிலா முற்றத்தின் மேல் ஏறி, வேனில்
- காமன் : ஆகுபெயர். அரமியம் - நிலா முற்றம். |
|