|
30 |
சுரும்புணக் கிடந்த நறும்பூஞ்
சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி
முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்
கதிரொருங் கிருந்த காட்சி போல |
|
(சுரும்புணக்
கிடந்த ..... காட்சி போல) சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை - சுரும்புகள் உண்ணும்
படி பரப்பிய நறிய பூக்களை யுடைய சேக்கைக்கண்ணே, முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல - முற்றிய கடலையுடைய ஞாலம் முழுவதையும் விளக்கும்
ஞாயிறும் திங்களும் சேர இருந்த காட்சிபோல
இருந்து, கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி - கரும்பு வல்லி என் பனவற்றைப் பெரிய
தோளிலே யெழுதி,
சுரும்புகளுண்டற்குப் பரப்பி வைத்தாற்போலக்
கிடந்த நறும் பூஞ் சேக்கை யெனலுமாம், முதிர்தல் - சூழ்தலுமாம். கதிர் - வெங்கதிராகிய
ஞாயிறும் தண்கதிராகிய திங்களும். ஒருங்கிருத்தல், இல்பொருளுவமம். போல இருந்து என
ஒரு சொல் வருவிக்க. கரும்பும் வல்லியும் சந்தனக் குழம்பால் எழுதப்படுவன.
[அடி. கரும்பையும் வல்லியையும் தோளில்
எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமே லெழுதி என்பதாயிற்று.] |
|