|
35 |
வண்டுவாய் திறப்ப நெடுநிலா
விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலின் திருமுக நோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை |
|
வண்டு
வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு - வண்டுகள்
புரியை நெகிழ்க்க நெடிய நிலவைப்போல விரிந்த வெள்ளிய இதழையுடைய மல்லிகையின் மலர்ச்சியையுடைய
மாலையோடே, கழுநீர்ப்பிணையல் முழுநெறி பிறழ - இதழொடியாது கட்டின கழுநீர்ப்பிணையலும்
குலைந்து அலைய, தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - மார்பிலிட்ட இவ்விரு வகை மாலையும்
மயங்கப்பட்டு இருவரும் செயலற்ற புணர்ச்சி யிறுதிக்கண், தீராக் காதல் திருமுகம் நோக்கி-நீங்காத
காதலையுடைய திருமகளைப் போல்வாளுடைய முகத்தை நோக்கி, கோவலன் கூறும் ஓர் குறியாக்
கட்டுரை - முன்னர்க் கருதாத பொருள் பொதிந்த உரையைக் கோவலன் கூறாநிற்பன் :
நிலா - ஒளியுமாம். தாரும் மாலையும்
மயங்கி என்பதனாற் புணர்ச்சி கூறிற்று ; இடக்கரடக்கு. கையறுதல் - கலவியால் அவசமுறுதல்.
காதலால் என விரித்தலுமாம். திரு - திருப்போல் வாள். ஓர், அசை. குறியா - தன் அறிவு
முதலியவற்றைக் கருதாத என்றுமாம். கட்டுரை - நலம் பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த
உரை. |
|