|
45 |
அடையார் முனையகத் தமர்மேம்
படுநர்க்குப்
படைவழங் குவதோர் பண்புண் டாகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக வீக்க |
|
அடையார்
முனையகத்து அமர் மேம்படுநர்க்குப் படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் - பகைவர் முனையிடத்தே
போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்குவதோர் முறைமை அரசர்க் குண்டாதலின்,
உருவி லாளன் ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவமாக ஈக்க - அனங்கன் போர் செய்தற்கு
எடுத்த பெரிய கரும்புவில் ஒன்றையும் நினக்குக் கரிய இரு புருவமாகத் திருத்தித் தரக்கடவன்
;
'ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம்
என்றது சேமவில்லையுங் கூட்டி' என அடியார்க்கு நல்லார் கூறினர் ; பின், வேலொன்று கண்ணிரண்டா
ஈத்தது என வருதலின், இதனையும் அவ்வாறு கோடல் பொருந்தும். மற்றும் அவர், 'முனிவராகிய
முரட் பகையை அழித்தற்கு வல்வில்லே வேண்டுதலின், ஒரு பெருங் கருப்புவில் லென்றார்'
என்று கூறியதும் ஈண்டைக்குப் பொருந்துவ தன்று ; காமவேள் தன்னுடன் செய்யும் போரில்
அவற்கு வென்றி தருவாளாகக் கொண்டு இங்ஙனங் கூறினானென்க. |
|