|
|
மூவா மருந்தின் முன்னர்த்
தோன்றலில்
தேவர் கோமான் தெய்வக் காவற
படைநினக் களிக்கவத னிடைநினக் கிடையென |
|
மூவா
மருந்தின் முன்னர்த் தோன்றலின் - மூவாமைக்கு ஏதுவாகிய அமிழ்திற்கு நீ முற்பிறத்தலால்,
தேவர் கோமான் - தேவர்க்கரசனாகிய இந்திரன், தெய்வக் காவற் படை - அசுரரை யழித்துச்
சுரரைக் காத்தற்கெடுத்த வச்சிரப் படையை, நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடையென
- அதன் இடை நினக்கு இடையாகவெனத் திருத்தித் தரக் கடவன் ;
மூவா என மூப்பினை யொழித்தல் கூறவே
இறப்பினை யொழித்தலும் கூறிற்றாம். நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால்
எனினுமமையும். வச்சிரம் இருதலைச் சூலமாய் நடுவு பிடியா யிருத்தலின் அதன் இடையை மகளிர்
இடைக்கு உவமங் கூறுவர். ஆக வென ஒரு சொல் வருவிக்க. |
|