3. அரங்கேற்று காதை

பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்

22
உரை
23

        பிண்டி - பொருட்கை. ஆடல் - பிணையல் ; தொழிற்கை. புறக்கூத்தில் ஆடல் நிகழுமிடத்து அவிநயம் நிகழாமலும், அவிநயம் நிகழுமிடத்து ஆடல் நிகழாமலும் களைதல்.