3. அரங்கேற்று காதை

குரவையும் வரியும் விரவல செலுத்தி


24
உரை
24

        குரவை - குரவைக்கூத்து ; அது, காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைத்தாடுவது ; அதன் இயல்பினை, "குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப" என்பதனானறிக.

       
வரி - வரிக்கூத்து ; அஃது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்ற நடித்தல். இதற்கு வரிச்செய்யுள் பாட்டாகும். இதன் இயல்பினை, "வரியெனப் படுவது வகுக்குங் காலைப், பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும், அறியக் கூறி யாற்றுழி வழங்கல்" என்பதனானறிக. வரிக்கூத்து ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது.


       
இத் தொடர்நிலைச் செய்யுளின்கண், முல்லை சார்ந்து ஆய்ச்சியர் குரவையும், குறிஞ்சி சார்ந்து குன்றக் குரவையும், நெய்தல் சார்ந்து கானல்வரியும், பாலை சார்ந்து வேட்டுவ வரியும், மருதஞ் சார்ந்து ஊர் சூழ்வரியும் நிகழ்ந்தனவாக அமைந்திருத்தல் அறியற்பாற்று.

       
வரிக்கூத்தானது கண்கூடுவரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எண் வகைப்படும். இவற்றினியல்பெல்லாம் வேனிற்காதையால் விளக்கமாம். இனி, "இவ் வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாரு முளர்" என்று கூறி, அடியார்க்கு நல்லார் அதற்கெடுத்துக் காட்டிய கலிவெண்பாட்டொன்றால் தமிழகத்தே பண்டைநாளில் வழங்கிய எத்தனையோ வகையான கூத்துக்களும் பாட்டுக்களும் புலனாகின்றன; அச்செய்யுள் பின்வருவது :

       
"சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை
       
கொந்தி கவுசி குடப்பிழுக்கை--கந்தன்பாட்
       
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி
       
சூலந் தருநட்டந் தூண்டிலுடன்--சீலமிகும்
       
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
       
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி--மீண்ட
       
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
       
மகிழ்சிந்து வாமன ரூபம்--விகடநெடும்
       
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்

       
தத்தசம் பாரம் தகுணிச்சங்--கத்து
       
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
       
பறைபண் டிதன்புட்ப பாணம்--இறைபரவு
       
பத்தன் குரவையே பப்பறை காவதன்
       
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை--எத்துறையும்
       
ஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக்
       
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து--மூத்த
       
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
       
அழகுடைய பண்ணிவிக டாங்கந்--திகழ்செம்பொன்
       
அம்மனை பந்து கழங்காட லாலிக்கும்
       
விண்ணகக் காளி விறற்கொந்தி--அல்லாத
       வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
       
சாந்த முடைய சடாதாரி--ஏய்ந்தவிடை
       
தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந்
       
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு--மிக்க
       
மலையாளி வேதாளி வாணி குதிரை
       
சிலையாடு வேடு சிவப்புத்--தலையில்
       
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
       
டிருண்முகத்துப் பேதை யிருளன்--பொருமுகத்துப்
       
பல்லாங் குழியே பகடி பகவதியாள்
       
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல்--அல்லாத
       
உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி
       
குந்திவரும் பாரன் குணலைக்கூத்--தந்தியம்போ
       
தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப்

       
பாடும்பாட் டாடும் படுபள்ளி--நாடறியுங்
       
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே
       
துஞ்சாத சும்மைப்பூச் சோனக--மஞ்சரி
       
ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்
       
கோத்தவரிக் கூத்தின் குலம்."